வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (19:58 IST)

இன்னும் இன்னும் சாப்பிட தோணும் தயிர் குருமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 
 
தயிர் - 2 கப் 
தேங்காய் - 1 மூடி 
ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன் 
எண்ணெய் - 4 ஸ்பூன் 
பட்டை- 2
கிராம்பு-3 
உப்பு - தேவையான அளவு 
பச்சை மிளகாய் - 6 
கசகசா - 2 ஸ்பூன் 
துவரம் பருப்பு - 3 ஸ்பூன் 
கேரட் - 100 கிராம் 
பீன்ஸ்- 100 கிராம் 
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
ஏலக்காய் - 3
மிளகாய் வத்தல் - 3
எலுமிசத்தை சாறு - 1 ஸ்பூன் 
மிளகு - 1 ஸ்பூன் 
சீரகம் - அரை ஸ்பூன் 
 
செய்முறை:
 
தயிரை கடைந்து உப்பு போட்டு வைக்கவும், பின்னர் தேங்காய், பச்சை மிளகாய் , ஊறவைத்த துவரம் பருப்பு, மிளகு சீரகம் அவற்றை அரைக்கவும். பீன்ஸையும் , கேரட்டையும் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பீன்ஸ், கேரட், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 
கொதித்ததும் மீதி எண்ணையில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். இப்பொழுது எலுமிச்சை சாறு, ஜாதிக்காய் பொடி, கொத்தமல்லி இல்லை , கடைந்த தயிரை சேர்த்து இறக்கவும்.