1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (09:49 IST)

வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும் முடக்கத்தான் கீரை !!

Mudakathan Keerai
முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை. இது ஒரு ஏறு கொடி. வேலி மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. முடக்கத்தான் இலை துவர்ப்புச் சுவையுடையது.


முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள்  சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.

இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும். முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.

முடக்கத்தான் கீரையை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.