1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (19:17 IST)

வாரம் ஒரு முறை வெந்தயக்கீரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

Fenugreek Leaves
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.


சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . மூலநோய், அதிக அமிலத்தன்மை,  உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும்.

வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்  பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
குடலில் உள்ள பூச்சிகளை அகற்ற வெந்தயகீரை பயன்படுகிறது.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒருடம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக்குணமாகும்.

வெந்தய கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நம் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.