1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (13:10 IST)

அற்புத மருத்துவ பலன்களை அள்ளித்தரும் கரிசலாங்கண்ணி !!

Karisalankanni
கரிசலாங்கண்ணி பொடி, எண்ணெய் கொதிக்க வைத்த கலவையில் இருந்து வடிகட்டி எடுத்த பின், அடியில் உள்ள வண்டலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, தலையில் தடவினால் முடி கறுத்த நிறமாக ஒரு மாதம் வரை இருக்கும்.


பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் நன்றாகக் கழுவி, பசையாக அரைத்து அதனுடன் 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெய்யில் கலந்து, அடுப்பில் வைத்து நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து,தினமும் இரண்டு வேளைகள் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்ய மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.

கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.