ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:05 IST)

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!
கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கல்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் ஆகியன இதில் அதிகளவில் காணப்படுகின்றன.


கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.

இரத்த சோகையை விரட்டும் முருங்கை : முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிக சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. இரும்புச் சத்தும் விட்டமின் சியும் சேர்ந்த கலவை, இரத்தத்தை உற்பத்தி செய்யும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை இதனை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.