1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் எதிப்பு மண்டலத்திற்கு சிறந்த ஒரு மருந்தாகும் மொச்சை கொட்டை !!

மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.

பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். இது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மொச்சையை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் மொச்சையை  வேக வைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.
 
மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. இது பீன்ஸ் வகையை சேர்ந்தது.
 
அதில் உள்ள நன்மைகளை இப்போது காண்போம். பெரும்பாலோனார் இதை சாப்பிடுவதால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். அதற்கு பதிலாக அதை வேக வைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்த்தொல்லை வராது. மொச்சை கொட்டையில் இரும்பு, கால்சியம் சத்துகள் அதிக அளவில் உள்ளது.
 
கர்ர்பிணி பெண்களுக்கு கொடுக்கலாம். மொச்சையில் உள்ள லெவோடோபா என்ற பொருள் பார்கின்ஸன் நோயுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் மன அழுத்ததை குறைக்க உதவுகிறது.
 
நோய் எதிப்பு மண்டலத்திற்கு சிறந்த ஒரு மருந்தாக பயன்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஒரு 100 கிராம் மொச்சையில் 40 கிராம் புரோட்டின் உள்ளது.
 
இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். 100 கிராம் மொச்சையில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.