செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலை ஆரோக்கியமாக வைக்க பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இளநீர் !!

பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது தான் இளநீர். மேலும் இது மிகவும் இனிப்பாகவும், அற்புதமான சுவையிலும் இருக்கும். இத்தகைய இளநீரை தினமும் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். 

இளநீரில் எலக்ரோலைட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக பராமரித்து, அதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
 
கார்போனேட்டட் பானங்களை தேடி வாங்கி குடிப்பதற்கு பதிலாக, இளநீரை வாங்கிக் குடித்தால், உடலின் ஆற்றல் ஊக்குவிக்கப்படுவதோடு, உடனடி எனர்ஜியையும் பெறலாம். மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், நாள் முழுவதும் வேண்டிய ஆற்றலை இது வழங்கும்.
 
இளநீரில் கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை தினமும் குடித்து வந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
 
இளநீரில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அமிகம் உள்ளதால், இது மிகவும் சக்தி வாய்ந்த டையூரிக் ஏஜென்ட்டாக செயல்பட்டு, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். அதுமட்டுமின்றி, இளநீரை தினமும் குடித்து வந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
 
கர்ப்பிணிகள் இளநீரை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் இளநீர் தாகத்தை தணிப்பதோடு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.
 
தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, அதனால் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். முக்கியமாக தினமும் இளநீர் குடித்து வந்தால், அதிலும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதனால் நோய்களின் தாக்கம் குறையும்.