1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கூடுமா...?

பூண்டை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நாம் பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியம் நமக்கு அதிகமாகவே கிடைக்கின்றது.

அதிலும் வறுத்து சாப்பிட்டால் சில சிறப்பு நன்மைகள் இருக்கின்றது. ஆறு பூண்டு பற்களை சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரைப்பையில் உள்ள உணவு நன்கு செரிமானம் அடைய இது உதவுகின்றது.
 
இது ஒரு சிறந்த உணவாகவும் பயன்படுகின்றது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தை வெளியேற்றுகின்றது.
 
உடலில் கெடுதல் தரக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியாவானது இரத்த நாளங்களுக்குள் சென்று அவற்றை வெளியேற்றுகிறது.
 
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் பிராடிக்ககைகள் உள்ளிக்கைகளை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழிக்க பயன்படுகின்றது. கொலஸ்டராலின் அளவை சீராக வைத்துக் கொள்கிறது. உடலில் உள்ள தமணிகளை சுத்தம் செய்து இதய நோய் வராம தடுத்து காத்துக் கொள்கின்றது.
 
எலும்புகளை பலமாக வைத்துக் கொள்கின்றது. பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாகவும் இருக்கின்றது. பச்சையாக பூண்டை நன்றாக அரைத்து அதனை வடிகட்டிய நீரினை பருகினால் படை மற்றும் மூட்டைப்பூச்சிகளினால் ஏற்பட்ட அரிப்பு முழுவதுமாக குணமடையும் .
 
வறுத்த பூண்டை தினசரி சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் சளி தொந்தரவு பிரச்சனைகள் குறைந்துவிடும். மேலும் இதில் உள்ள பாக்டீரியாக்களின் எதிர்ப்பு குணமானது தொண்டை எரிச்சலினை குணப்படுத்த உதவுகின்றது.