செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முளைகட்டிய பயற்றில் உள்ள மருத்துவ குணங்கள் !!

முளைகட்டிய உளுந்து: புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்து  காணப்படுகிறது. 

நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வாக இருக்கும். அவர்கள் உடல் வலுப்பெறுவதற்கு அதிகமாக முளை கட்டிய உளுந்தை  சாப்பிடலாம்.
 
முளைகட்டிய கம்பு: முளைகட்டிய கம்பை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் தரும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைச் சரிசெய்யும். மேலும் இது உடல் சூட்டைக் குறைக்கும். சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
 
முளை கட்டிய பாசிப்பயறு: முளை கட்டிய பாசிப் பயிற்றை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதில் புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன.
 
முளைகட்டிய தட்டை பயறு: முளைகட்டிய தட்டை பயிற்றில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது.
 
முளைகட்டிய சோயா பயறு: குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு முளைகட்டிய சோயா பயறு உதவுகிறது. இதில் துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம், புரதம், இரும்பு, ஃபோலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா 3 வகை கொழுப்பு, மாவுச்சத்து, பீட்டாகரோட்டின், தயாமின், ரிபோஃபோமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக  அளவில் உள்ளது.