வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நிலக்கடலையில் நிறைந்து காணப்படும் சத்துக்கள் என்ன தெரியுமா...?

நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. 

இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்படமால் பாதுகாக்கிறது.
 
மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.
 
நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
 
நிலக்கடலையில் தீங்கில்லாத கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.
 
நிலக்கடலையில் வைட்டமின் பி சத்து வகையை சார்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த பயோட்டின் தலை முடியின் ஆரோக்கியத்தை  காப்பதோடு, அதிக அளவில் முடி உதிர்வதை தடுக்கிறது.