திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (09:24 IST)

வெள்ளரி விதையில் உள்ள மருத்து குணங்கள் !!

Cucumber Seed
வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.


வெள்ளரி விதை முடி வளர்வதை அதிகரிக்கும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.

வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.

அழகு குறித்த பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் உணவில் கண்டிப்பாக வெள்ளரி விதை சேர்க்கலாம். இதனால் சருமம் பளபளப்பாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.

வெள்ளரி விதை சரும  வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை அடக்கியுள்ளது.