1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (18:04 IST)

உடல் பருமனை குறைக்க வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்...?

உடலில் உள்ள தேவையற்ற ஊளைச்சதையை குறைக்க உடலில் உள்ள திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்து குறைய வேண்டும். ஊளைச் சதையைப்போக்க பல வழிகள் உண்டு. சாப்பாட்டின் அளவைக் குறைப்பதும், கீரைவகை உணவுகளை அதிகமாக சாப்பிட்டும், இறைச்சி வகை உணவுகளை குறைவாக சாப்பிடுவதும், முறையான உடற்பயிற்சி செய்வதுமாகும்.


சுரைக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், வெறும் தேநீர் குடிபதற்கு பதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தேநீரை காலையில் குடிக்கலாம்.

வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தாலும் உடலில் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

சாதாரண தண்ணீர் குடிப்பதற்குப் பதில் சோம்பு கலந்த தண்ணீரைப் குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகள் குறையும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் போன்றவற்றை பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.