வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (17:47 IST)

உடலுக்கு உரமளிக்கும் இந்த பழம் பற்றி தெரியுமா...?

பேரிச்சம் பழத்தில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கனிமங்கள், சர்க்கரை, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன. தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.


பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும். பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும் போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேகவைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

பேரிச்சம் பழம் எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. தினமும் பேரிச்சம் பழம் உட்கொள்வது நல்லது.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.