1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Masikkai with many wonderful medicinal properties !!

பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் !!

மருத்துவ குணங்கள்
பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் மரத்தின் பிசினிலிருந்து வரும் ஒரு மூலிகை தான் மாசிக்காய். இந்த மாசிக்காய் மூலிகையை பல்வேறு பக்குவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கும். கருப்பை பலம் பெறும்.
 
மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.
 
மாசிக்காய் பொடியை நீர்விட்டு நன்கு குழைத்து ஆசனவாயில் மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் போன்றவற்றின் மீது தடவி வர சிறந்த நிவாரணம் அளிக்கும். 
 
தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
 
மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும் புண்கள் ஆறும். ஈறுகள் உறுதிபெறும். ஈறுகளில் ரத்தம் வடிவது நிற்கும். பற்சொத்தை மற்றும் உஷ்ணம் காரணமாக வாயில் ஏற்படும் புண்கள் குணமாகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சூப்பர் டிப்ஸ் !!