கொலெஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறதா சப்ஜா விதை...?
இரும்பு சத்து அதிக அளவு இருக்கும் சப்ஜா விதை, ரத்த சோகையை வரவிடாமல் பாதுகாக்கும். உடலில் உள்ள கிருமிகளை அகற்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் இளமையிலே முதுமையை ஏற்படுத்தும் செல்களை தடுத்து இளமையான தோற்றத்தை தருகிறது.
சப்ஜா விதைகள் பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கி உடலை மேம்படுத்துகிறது. இதில் ஆன்டி- ஆக்சிடென்ட் தன்மை அதிகம் உள்ளதால் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.
சப்ஜா விதைகள் ஜீரணசக்தியை அதிகரித்து செரிமானம் செய்து வயிற்றை சுத்தமாக வைக்கிறது. மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் குறையும்.
சிறுநீர் செல்லும் இடத்தில் ஏற்படும் புண்கள், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. புண்களை குணமாக்கும்
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வயிற்று வலியினால் மிகவும் அவதிப்படுகிறார்கள். வலியை குறைத்து மாதவிடாயை சீராக்குகிறது.
சப்ஜா விதைகள் முடியை பாதுகாத்து அழகான கூந்தலை தருகிறது. தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து அழகிய தோற்றத்தை தருகிறது சப்ஜா விதை. பல்வேறு மினரல்கள் இருப்பதால் பொலிவான தோற்றத்தை தருகிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டால் கொலெஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.