செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தோலின் நிறத்தை கூட்டி இளமை தோற்றத்தை தரும் தேங்காய் பால் !!

தேங்காய் பால் தரும் நன்மைகள்பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும்.

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். 
 
விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
 
இரும்பு சத்து குறைபாடுகளால் உடலில் வலிமை குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படுகிறது. வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது.
 
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
 
தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது.