1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...!

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். நுரையீரலை வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் தடுக்க  தடுப்பூசிகள் உள்ளன. 
இதய நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இந்தத் தடுப் பூசிகளைப் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். இந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிகரெட் பழக்கம் தான். அத்தோடு விறகு அடுப்புப் புகையை அடிக்கடி சுவாசிக்கும்  குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படுகின்றது.
 
நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு  உள்ளது.
 
இந்த புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் சிகரெட் புகைப்பது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கும் புற்று நோய் ஏற்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் நிலை சிகரெட் புகைப் பாதிப்பால் பெண்களும், குழந்தைகளும் தான் அதிக அளவில்  பாதிக்கப்படுகின்றனர்.
 
தினமும் பழங்கள், கீரைகள் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பீடி, சிகரெட் பழக்கத்தைத் தவிர்த்தாலே இந்த புற்று நோயில் இருந்து நம்மால்  தப்பிக்க முடியும்.
 
அறிகுறிகள்: அடிக்கடி இருமல் ஏற்படும், சளித் தொல்லை இருக்கும், மூச்சு திணறல் உருவாகும், நெஞ்சு வலி ஏற்படும், தொடர்ந்து இருமல், இருமலுடன் ரத்தம் வரும், இளைப்பு ஏற்படும். இரு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நோய்  முற்றிய பிறகு எலும்புகளில் வலி, திடீரென குரலில் மாற்றம், தோள் பட்டையில் வலி, நகங்களில் பிரச்சனை போன்றவை ஏற்படும்.
 
சிகிச்சை முறைகள்: நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதற்கட்ட பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு  ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவுடன் ரிலீவர் மருந்து அளிக்கப்படும். பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், ‘கன்ட்ரோலர்’ மருந்து அளிக்கப்படும்.