சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை செய்ய வேண்டியவை...!

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இது  விரைவில் சொரியாசிஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைத்து வகையான மீன்களான சூரை, சால்மன்,  கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ்  நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.
 
செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை:
 
தோலைச் சொரிய கூடாது. ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும். ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள்  ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள். 
சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் சமாகும். மருந்துகளை  தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும். சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும். 
 
மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்வதோடு, ஒய்வு எடுத்துக்கொள்ளவும்.
 


இதில் மேலும் படிக்கவும் :