செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சொரியாசிஸ் நோய் வரக் காரணங்களும் அறிகுறிகளும்....!

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் நீண்ட காலம் ஏதேனும் நோயினால் பாதிக்கப்படுவதால், ஏதேனும் நோய்க்காக நீண்ட காலம் சாப்பிடும்  மாத்திரைகளின் பக்க சிகிச்சைகளால் ஏற்படும் பின்விளைவுகளா, அதிக மனக்கவலை போன்றவற்றால் சொரியாசிஸ் நோய் வரலாம் என நம்பப்படுகிறது.
சொரியாசிஸ் ஒரு தொற்று வியாதியல்ல ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு தொற்றாது. நோயாளி பயன்படுத்திய உடை, சீப்பு, டவல் மற்றவர் பயன்படுத்தினால்  இந்நோய் வருமோ என்று பயம் கொள்ள தேவை இல்லை. சிலருக்கு சொரியாஸிஸ் மரபியல் காரணமாக வரும்.
அறிகுறிகள்:
 
உடலின் பல்வேறு இடங்களில் அதாவது முழங்கால், காதின் பின்புறம், தலை இவற்றில் வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள் அதிலிருந்து வெண்ணிற பொடுகு  போன்று உதிர்தல், அரிப்பு, சொரிந்தால் ரத்தச்கசிவு, அக்குளில் அல்லது மார்பகங்களுக்கு கீழே அல்லது இடுப்பில் அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற  படை, தோல் உரிதல், அரிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை காணப்படும்.