1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

உண்ணா நோன்பு இருப்பது ஆரோக்கியமானது என கூறப்படுவது ஏன்...?

புத்தி சரியாக இயங்கவில்லையெனில் மனம் எதற்கெடுத்தாலும் தடுமாறும்.  வாழ்க்கையில் பிரச்சினைகள் வெகு வேகமாக வளரும். தீர்க்க முடியாமல் திணறல் ஏற்படும்.


எனவே, வயிறு என்கிற விஷயத்தை மிக உன்னதமான முறையில் வைத்துக் கொள்ள விரதங்கள் மிகவும் உதவுகிறது. 
 
பதினைந்து நாளைக்கு ஒரு முறை முற்றிலுமாய் பட்டினி இருந்து, நீர் கூட அருந்தாமல் ஜீரண சுரப்பிகள் விழித்தெழும் படி செய்வது. "உணவு வேண்டும்..  உணவு வேண்டும்.." என்று அவைகளைக் கதற வைப்பது. அன்று முழுவதும் அவைகளுக்கு உணவிடாமல், வயிற்றில் தேங்கிய உணவுகளையே அவைகள் ஜீரணம் செய்து சுத்தம் செய்யும் படி வைப்பது.  இப்படி உடம்பில் சேர்ந்த கொழுப்புகளை உருவி சக்தியாக மாற்றிக் கொள்வதன் மூலம் உடம்பு இயங்குவதற்கு வேண்டிய பலத்தைப் பெற்று விடும்.இதற்கு இந்த விரதங்கள் உதவுகின்றன.  
 
இப்படி விரதமிருப்பதால் அதிக கொழுப்பு சக்தி உடம்பிலிருந்து குறைகிறது. ரத்த ஓட்டம் அதிகமாகிறது. அதனால் புத்தி சுறுசுறுப்படைகிறது.  புத்தி சுறுசுறுப்பாயிருப்பதாலேயே  மனம் எல்லாவற்றையும் சரி வர ஜீரணித்து, முடிவுகளைத் தெளிவாக எடுக்கிறது.
 
பகல் முழுவதும் உண்ணாமல் இருந்து, இரவு முழுவதும் வெறுமே சுருண்டு கிடந்து, விடியற்காலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறிதளவு உணவு எடுத்துக்  கொள்வது தான் நல்லது.
 
உடம்பை பட்டினி போட்டு வருத்துவது மட்டுமே நோக்கமல்ல. ஒரு அளவு, ஒரு கால கட்டம் பட்டினி போட்டு விட்டு அந்தக் கால கட்டம் முடிந்த பிறகு உடனடியாக, அந்த வயிற்றுக்குச் சிறிதளவு செரிக்கின்ற உணவு அளிப்பதே நல்லது.