1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Kadukkai Powder can help lower blood sugar levels !!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் கடுக்காய் !!

கடுக்காய்
கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.


பல் துலக்கிய பின், பற்களையும், ஈறுகளையும் கடுக்காய் தூள் கொண்டு மசாஜ் செய்து, நன்றாக மசாஜ் செய்த பின் ஒரு நிமிடம் கழித்து வாய் கொப்புளித்து வர பல் சார்ந்த பிரச்சனைகள் வராது.

கடுக்காய் பசியைத் தூண்டும். செரிமானதை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுக்காய் உதவுகிறது.

10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை கொதிக்கவைத்து தாங்கக்கூடிய வெப்பநிலைக்கு வந்ததும், குடிக்க வேண்டும். தொண்டை புண் குணமாகும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் சருமத்தை சுத்தப்படுத்தும். உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அடிக்கடி உணவில் தூதுவளையை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!