வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பேய் விரட்டி மூலிகையை பயன்படுத்தி நோய்களுக்கு மருந்து தயாரிப்பது எப்படி...?

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பேய் விரட்டி துளசி இனத்தை சேர்ந்தது. இது, காய்ச்சலை தணிக்க கூடியது மட்டுமின்றி வலி நிவாரணியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது. 
 

பேய் விரட்டியானது இருமல், சளி, காய்ச்சலை இல்லாமல் போக்கும் அற்புத மருந்தாகிறது. மூட்டுவலியை போக்குகிறது. இதனுடைய புகை கொசுக்களை விரட்டும்  தன்மை உள்ளது. மழைக்காலங்களில் இதை பயன்படுத்துவதால், காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
 
1. பேய் விரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய் விரட்டி இலைகள், சீரகம், மிளகு.
 
செய்முறை: 6 பேய் விரட்டி இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு அரை ஸ்பூன் சீரக பொடி, கால் ஸ்பூன் மிளகு பொடி சேர்த்து  கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் எடுத்துவர வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், குளிர் காய்ச்சல் என  எவ்வித காய்ச்சலும் சரியாகும். உடல் வலி சரியாகும். சளி இல்லாமல் போகும். பேய் விரட்டி நோய்களை விரட்டும் தன்மை உடையது.
 
2. பேய் விரட்டியை பயன்படுத்தி மூட்டுவலி, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய் விரட்டி இலைகள், விளக்கெண்ணெய்.
 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு பேய் விரட்டி இலைகளை போட்டு வதக்கவும். இளஞ்சூட்டுடன் எடுத்து கட்டி வைத்தாலோ அல்லது ஒத்தடம் கொடுத்துவர மூட்டுவலி, வீக்கம் குணமாகும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். எவ்வித வலியாக இருந்தாலும் இதை பயன்படுத்தும்போது  வலி, வீக்கம் இல்லாமல் போகிறது.