செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூட்டுவலி எதனால் ஏற்படுகிறது அதற்கான காரணங்கள்...?

மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தோமென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவைத்தான் நாம் சொல்லவேண்டும். புளிப்பான உணவுகளை எந்த  அளவிற்கு முடியுமோ குறைத்துவிடுங்கள். 

எண்ணெய்யில் வறுக்கக்கூடிய உணவுகளை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். அதே போல் வாயுவை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் இருக்கிறது. அதில் உதாரணமாக பார்த்தோம் என்றால் வாழைக்காய். 
 
மூட்டுவலி இருப்பவர்கள் வாழைக்காயை உட்கொண்டால் வாய்வு அதிகமாகி மூட்டுவலி இன்னும் அதிகமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எனவே வாழைக்காயை முழுமையாக நீக்கிவிடுங்கள். அதே போல் அகத்திக்கீரை, பாகற்காய் இவைகள் உடலிலே சில முரண்பாடுகளைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள். 
 
மூட்டுவலி இருக்கும் பொழுது பித்தவாயு அதிகமாக இருக்கும். பித்தத்தைக் குறைக்கக்கூடிய உணவுகளைத்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவேண்டும். அதேபோல்  இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுவகைகளை தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும்.
 
மூட்டுவலி இருக்கிறது என்றால் பித்தத்தை குறைப்பதற்கு நெல்லிக்காய்க்கு நல்ல பலன் உண்டு. அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து தினசரி 4 நெல்லிக்காயை ஒன்றிரண்டாக நறுக்கி கூடவே சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதை காலையிலும் இரவிலும் தொடர்ந்து  சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட மூட்டுவலியாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும்.