1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

டெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...!!

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது,  அவருக்கும் டெங்கு பரவும். 
வைரஸ் நோயாளியிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகள் உடல் நலம் பெறும்வரை,  கொசுவலைக்குள் இருப்பது நல்லது.
 
டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான ads கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும். பழைய டயர், தூக்கி வீசி எரியப்பட்ட  பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவாறு பார்த்து கொள்ளவேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி  விடவேண்டும்.
 
வீட்டில் உப்யோகபடுத்தாத தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து கொள்ளவேண்டும்.  அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்க்கை சுழற்சி ஏழு நாள். ஆதலால்,  எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனப்பெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ  ஏதுவாக அமைந்துவிடும்.
 
நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்கவேண்டும். வீட்டில் உள்ள குளிரூட்டி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்காமல்  அவ்வப்போது நீக்கி விடவேண்டும்.
 
கொசு கடிக்காமல் கை, கால்களை நன்றாக மூடி வைக்கவேண்டும். கொசு வலைகளை பயன்படுத்தலாம். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு  வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் சிலருக்கு இது சுவாச  அலர்ஜி ஏற்படுத்தும்.
 
இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும்.
 
அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்.
 
நீ சேர்ந்திருக்கும் இடங்களில் கொசுவின் லார்வாவை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே  நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.