1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Here are some simple natural ways to cleanse the lungs !!

நுரையீரலை சுத்திகரிக்க சில எளிய இயற்கை வழிமுறைகள் !!

நுரையீரல்
இஞ்சியானது, சுவாச பாதை மற்றும் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் அருமருந்தாகும். இதனை கிரீன் டீயுடன் சேர்த்து பருக, வியர்வையின் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். தூங்குவதற்கு முன்பு, கிரீன் டீ பருகி வர நல்ல பயனை அளிக்கும்.

புதினா இலைகளை மூன்று அல்லது ஐந்து எடுத்து தினமும் மென்று வர, நுரையீரலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அது வெளியேற்றிவிடும். மேலும், 20 நிமிட வெந்நீர் குளியல் மற்றும் தினமும் அரைமணி நேர யோகா பயிற்சியின் மூலமாகவும் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றலாம்.
 
உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
 
நுரையீரலை சுத்தப்படுத்த:
 
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது அவசியம். முதல் நாள் இரவு படுக்கைக்கு முன்பாக ஹெர்பல் டீயை அருந்த வேண்டும், இது உடலிலுள்ள  டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது.
 
காலை உணவுக்கு முன்பாக 300 மிலி தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும். காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே 300 மிலி கேரட் சாறை  அருந்தலாம்.
About Writer
Sasikala