புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:41 IST)

எழுந்து உட்கார்ந்தார் எஸ்.பி.பி: எஸ்.பி சரண் வீடியோ வைரல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக உடல் நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் அவரது நுரையீரலில் இருக்கும் பாதிப்புக்கு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் எஸ்பிபி சரண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் எஸ்பிபி அவர்கள் தற்போது எழுந்து உட்காருகிறார் என்றும் 15 முதல் 20 நிமிடங்கள் அவரால் உட்கார முடிகிறது என்றும் மேலும் அவர் பேச்சு பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
கடந்த நான்கு நாட்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் நுரையீரலும் சீராக இருப்பது எக்ஸ்-ரே மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தை குணமாக பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்வதாக எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on