திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2020 (11:17 IST)

நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்… எஸ் பி பி உடல்நிலைக் குறித்து சரண் விளக்கம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும், பாடகர் எஸ்பிபியின் உடல்நிலைக் குறித்து அவரது மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட்  5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த இரு நாட்களாக அவர் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் ‘அப்பாவின் நுரையீரல் செயல்பாடு கடந்த இரு தினங்களை விட இப்போது முன்னேற்றம் கண்டுள்ளது. மெதுவாக ஆரோக்கியத்தை நோக்கி மெதுவாக முன்னேறி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். உங்கள் பிரார்த்தனைகள், அக்கறை, அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக் கூறியுள்ளார்.