1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (08:43 IST)

அடிக்கடி இஞ்சி ஜூஸ் குடித்தால் என்ன செய்யும் தெரியுமா..?

Ginger Juice
வீடுகளில் உணவிற்காக பயன்படுத்தப்படும் மூலிகையான இஞ்சி பல்வேறு நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகும். இஞ்சியை சாறு பிழிந்து ஜூஸாக குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
  • இஞ்சியை சாறு எடுத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இஞ்சி ஜூஸ் தயாரிக்க வேண்டும்.
  • இஞ்சி ஜூஸ் குடிப்பதால் சளி, இருமல் மற்றும் செரிமான பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.
  • அடிக்கடி இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால் மூளையில் ப்ரோட்டீன் அளவு அதிகரித்து மூளை ஆரோக்கியம் மேம்படும்.
  • இஞ்சியில் உள்ள ஆண்டிபயாடிக் தன்மை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
  • இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால் அதில் உள்ள நிவாரணி செயல்பாடுகள் மூட்டுவலியை குணப்படுத்தும்.
  • இஞ்சி ஜூஸ் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால்கள், பாராடோல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோயில் இருந்து காக்கும்.