1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 30 மார்ச் 2023 (08:53 IST)

எலுமிச்சையில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு பயன்களா?

மஞ்சள் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான ஒரு பொருள். அதை எலுமிச்சை சாறில் கலந்து பருகும்போது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.
  • வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேறும்.
  • எலுமிச்சை சாறு, மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை பட்டை கலந்து அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகும்.
  • உணவுக்கு பின் எலுமிச்சை சாறு, மஞ்சள் கலவை அருந்துவது உடலில் உள்ள தேங்கிய கொழுப்புகளை நீக்கும்.
  • காலையில் தினம் எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து பருகி வர வேகமாக எடையை குறைக்கலாம்.
  • இந்த பானத்தில் ஆண்டி மைக்ரோபியல் பண்பு உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, இருமல் போன்றவை தடுக்கப்படும்.
  • எலுமிச்சை சாறு மஞ்சள் பானம் கல்லீரலில் சேரும் டாக்சின்களை உடைத்து கல்லீரலை பாதுகாக்கும்.
  • எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து அருந்துவதால் செரிமான சக்தி அதிகரிப்பதுடன், பித்தக்கற்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது.