7 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்..!
தினசரி வாழ்வில் சர்வ சாதாரணமாக ஏற்படும் நெஞ்சு சளி, தலைவலி உள்ளிட்ட சிறிய பிரச்சினைகளை எளிமையான நாட்டு மருத்துவம் மூலமாகவே குணப்படுத்த முடியும்.
-
தேங்காய் எண்ணெய்யில் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய பின் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.
-
சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
-
கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, ஆறிய பின் வடிகட்டி குடிக்க செரிமான பிரச்சினை தீரும்.
-
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
-
செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
-
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.
-
வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து குளித்து வந்தால் தேமர் குணமாகும்.