செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (15:03 IST)

நோய்களை அண்ட விடாத வெங்காயத்தாள் பயன்கள்..!

ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்சினைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது.
  • வெங்காயத்தாளில் விட்டமின் சி, பி2, ஏ, கே காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
  • வெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • இதில் உள்ள குரோமியம் சத்தானது நீரிழிவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
  • வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.
  • இதில் உள்ள புரோப்பைல் டை சல்பேட் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இதய ஆரோக்கியத்திற்கும் கொழுப்புகளை குறைக்கவும் வெங்காயத்தாள் நல்ல உணவு.
  • வெங்காயத்தாள் சாப்பிடுவதால் கண் சார்ந்த பிரச்சினைகள் பெருமளவில் குறையும்.