திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இவ்வளவு அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வெந்தயம்...!!

வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில் 10 நாட்கள் வரை வெந்நீருடன்  உட்கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்.
10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து அரை தேக்கரண்டி அளவு பெருஞ்சீரகமும், சிறிதளவு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து  சாப்பிட வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
 
வெந்தயத்தை அரைத்து, தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம். 
 
வெந்தயத்தை, தோசை மாவு தயாரிக்கும் போது சேர்த்து அரைத்து, உபயோகப்படுத்திவர (வெந்தய தோசை) உடல் பலம் பெறும்.
 
வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து, பொடித்து, சலித்து, தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம் வாயில்போட்டு தண்ணீர் குடித்து  வர நீரழிவு நோய் கட்டுப்படும்.
 
வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
 
வெந்தயத்தைக் கொண்டு, மெல்பா ரொட்டி என்கிற உணவு எகிப்து நாட்டில் தயாரிக்கப்படுகின்றது. இது ஒரு பாரம்பரியமான, சத்து நிறைந்த உணவாக எகிப்து மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.
 
மலமிளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. கல்லீரல் நோய்களைப் போக்கும் நீரிழிவு நோய்க்கு கண்கண்ட மருந்து குடல் சம்பந்தமான நோய்களுக்கு நல்மருந்தாகும்.