வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவாகவும் மருந்தாகவும் செயல்படும் பழங்கள்...!!

கோடையின் வெப்பத்தை தணிக்க தர்ப்பூசணி, கிர்ணி என அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.
உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித் தருபவை கனிகள். பழங்களில் மிகக் குறைந்த அளவில்  கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற  பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.
 
பழங்களை எல்லா நேரங்களிலும் சாப்பிடுவதைக் காட்டிலும் காலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அதன் பலன்களை அதிகமாகப் பெறலாம். பழங்களை காலை நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு, அது உடலிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
 
முலாம்பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதோடு பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தை வெப்பமான மாதங்களில் சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கிறது.
 
பழங்களில் இயல்பான தரம் குறையும் என்பதால் அதை அதிக குளிர் மற்றும் அதிக சூடான இடங்களில் பாதுகாத்து வைக்கக்கூடாது.  பழங்களைப் பாதுகாக்க மிதமான வெப்பம் மற்றும் குளிர்நிலைகளே உகந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வெரு விதமான பழங்களை சாப்பிடலாம்.
 
பருவகால பழங்களை அந்தந்த காலங்களில் அவரவர் உடலின் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்வது நல்லது. கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ,  ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.