1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (09:20 IST)

ரணகள்ளி மூலிகையின் அற்புத மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம் !!

Ranakalli herb
ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம், இலைகள் நீள்  வட்ட வடிவில் நீர் பற்று அதிகமாக காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும். இது ஓர்விதையற்ற தாவரம், இதன் இலைகளின் விளிம்புகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்வதை காணலாம்.


ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.

காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும். ரணகள்ளி மூலிகை இலைகளை நன்றாக மைய அரைத்து வெற்றிலையோடு சேர்த்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும்.

சிறுநீரக கற்களை கரைக்க இந்த  மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் உருவகும் எவ்வளவு பெரிய கற்களையும் மிக எளிதில் கரைத்து துகள்கலாக  சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது.

ரணகள்ளி இலைகளை  7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர நோய் பூரண குணம் அடையும். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாபிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை, அதற்க்கு அடுத்த நாள் அதைவிட சற்று பெரியது இப்படி படி படியாகதான் சாப்பிட வேண்டும்.

குறிப்பு: பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன், முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.