வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் இஞ்சி !!

இஞ்சி சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி,  இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு  வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம். 
 
புற்றுநோய் இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால்,  இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.
 
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும்.  இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
 
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். 
 
நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும். இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு,  உடல் கோளாறு நீங்கும்.
 
உங்களுக்கு இஞ்சியின் துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட பிடிக்காது என்றால், அதனை ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.