ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்த கீழாநெல்லியின் பயன்கள் !!

கீழாநெல்லி சமூலம், கரிசலாங்கண்ணி, தும்பை, சீரகம், பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு  நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

கீழாநெல்லி சமூலம், சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம்  காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.
 
கீழாநெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து  3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.
 
கீழா நெல்லியும், கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.
 
கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும். கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம்  ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.
 
கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
 
கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு,  இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.