புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala

கருத்தடை சாதனம் காப்பர் டி-யின் நன்மை தீமைகள் என்ன...?

பொதுவாக காப்பர் டி என அறியப்படும் கருத்தடை சாதனம், பெண்கள் கர்ப்பமடையாமல் தடுக்க கருப்பையில் செலுத்தப்படும் T வடிவ கருவியாகும். தம்பதிகள் வாழ்வின் ஒரு கட்டத்தில் கருத்தடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலுக்கு வர நேரிடும். 

இந்த வகையில் தம்பதிகள் மூன்று பிரிவுகளாக உள்ளனர். முதல் பிரிவில் உள்ளவர்கள் திருமணம் ஆன உடனே குழந்தை பெற விரும்பாமல், குழந்தைப் பேற்றைத்  தள்ளிப் போட விரும்புகின்றவர்கள். இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டாம் குழந்தைக்கான திட்டமிடுதலைத் தாமதப்படுத்த விரும்புகின்றவர்கள். மூன்றாம் பிரிவில் உள்ளவர்கள் இரண்டு குழந்தை பிறந்த பிறகு நிரந்தர அல்லது தற்காலிக கருத்தடையை நாடுகின்றவர்கள்.
 
இந்த ‘காப்பர் டி’ கருத்தடை சாதனம் செம்பில் ஆனது. இது டி வடிவத்தில் காணப்படும். இந்த சாதனத்தின் கீழ்ப்புறத்தில் நூல் மாதிரி அமைப்பு காணப்படும்.இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டி-யை வெளியே எடுக்க உதவுகின்றது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால்  பொருத்தப்படும். ஆகப் பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்யும்.
 
ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேராமல் இருப்பதை இந்த சாதனம் சாத்தியப் படுத்துகின்றது. இந்த சாதனத்தை மருத்துவரின்  ஆலோசனையோடும் உதவியோடு மட்டுமே பொருத்த வேண்டும். இந்த சாதனம் செம்பால் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பம்சமாகும். இந்த செம்பு உலோகம்  விந்தணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
 
பொதுவாகக் காப்பர் டி பொருத்திய காலத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து மாற்றப்பட வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை  மருத்துவரைச் சந்தித்துக் காப்பர் டி சரியான முறையில் உள்ளதா? என்பதைச் சோதனை செய்து கொள்வது மிக அவசியம். சில சமயம் காப்பர் டி நகர்ந்து விட  மிகவும் சிறிய வாய்ப்புள்ளது.