ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படும் வெந்தயக்கீரை !!
வெந்தய கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளது.
வெந்தயக் கீரை உயிர்ச்சத்து கொண்டுள்ள உணவாக விளங்குகிறது. வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஜீரண கோளாறுகளை சரி செய்யும். பசியைத் தூண்டும். இருமல் குணமாகும். நாவறட்சி நீங்கும். கண்பார்வை தெளிவடைய செய்யும்.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது. வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்பந்தப்ட்ட கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.
வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.
இக்கீரையில் தேங்காய் பால், முட்டை சேர்த்து குருமா தயாரித்து நெய்யில் தாளித்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும். வெந்தயக் கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் வாய்ப்புண் குணமாகும்.