1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (14:31 IST)

தக்காளியில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

Tomato
தக்காளியில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி, லைக்கோபின் போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


தக்காளியில் உள்ள லைக்கோபின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. லைகோபீன் பல்வேறு  புற்றுநோய் செல்கள் வளர்ச்சி மற்றும் பரவுவதை தடுக்க உதவுகிறது.

தக்காளி வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும்.  குறிப்பாக, டுடீன் மற்றும் ஜியாக்சாண்டின். வைட்டமின் A இன் இந்த இரண்டு வடிவங்களும் விழித்திரையில் குவிந்து, வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கின்றன.

நீரிழிவு நோயினால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தக்காளி குறைப்பதாக சொல்லப்படுகிறது. அவை வீக்கம், பெருந்தமனி தடிப்பு மற்றும் திசு சேதம் போன்ற நீரிழிவு நோயின் அனைத்து பொதுவான சிக்கல்களையும் குறைக்கின்றன.

தக்காளியில் உள்ள கூமரிக் அமிலம் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் பீடி மற்றும் சிகரெட் புகையின் பாதகமான விளைவுகளை குறைக்க உதவுகின்றன.

செரிமானம், செரிமான அமைப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தக்காளி உதவுகிறது. தக்காளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கலையும் தடுக்கிறது. எனவே கொஞ்சம் அதிகமாகவோ அல்லது காரமான உணவை சாப்பிட்டிருந்தால், உணவின் முடிவில் ஒரு சிறிய பழுத்த தக்காளியை உண்பது நல்லது.

தக்காளி ஆண்மை அதிகரிக்கும் அதாவது விந்தனுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பழங்களில் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் தக்காளியில் லைக்கோபின் எனும் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றி உள்ளது.