1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (17:19 IST)

உடலில் தோன்றும் உஷ்ணம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் கருப்பட்டி !!

karuppatti
கருப்பட்டியில் இரும்பு சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எளிதில் நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.


கருப்பட்டியில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை இருப்பதால், உடலில் தோன்றும் உஷ்ணம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்து வெப்ப தன்மையை சீராக  வைக்கிறது.

குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் அடிக்கடி நோய்வாய் படுவது குறையும் மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்தம் வல்லது. அதோடு உடலில் உள்ள இன்சுலின் அளவை சீர் செய்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு  தினமும் சிறிய  அளவிலான  கருப்பட்டியினை  கொடுத்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதோடு, அடிக்கடி ஏற்படும் சீறுநீர் போக்கு குறையும்.

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த கருப்பட்டி சிறந்து மருந்தாகும். குறிப்பாக பருவம் அடைந்த பெண் பிள்ளைகளுக்கு தினமும் கருப்பட்டியுடன் உளுந்தை சேர்த்து களி செய்து கொடுத்தால் கர்ப்பபை பலம் பெறுவதுடன்  இடுப்பு எலும்புகளும் உறுதி பெறும்.

வெள்ளை சர்க்கரை வைட்டமின் பி, மற்றும் கால்சியம் சத்தை உறுஞ்சி உடலுக்கு தேவையான பலத்த நீக்குகிறது. இதை தவிர்க்கும் வகையில் நாம் தினமும் பருகும் காபி, டி இவற்றில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து பருகி வந்தால் உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் கிடைக்கிறது.

பசியின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு சீரகத்தை நன்கு வறுத்து அத்துடன் சுக்கு சேர்த்து பொடி செய்து, கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை பிரச்சனை நீங்கி  நன்கு உணவு உட்கொள்ள உதவும் மற்றும் செரிமானம் எளிதில் ஏற்படும்.

இரும்பல், சளி தொல்லை: சுக்கு, மிளகு இரண்டையும் நன்கு பொடி செய்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்ல் மற்றும் சளி தொல்லையிலிருந்து விடுபடலம். முக்கியமாக இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அடிக்கடி இந்த தொல்லை ஏற்படுவது கட்டுப்படும்.