திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!!

சாத்துகுடியில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் பல், ஈறுகளில் போன்ற பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து  வரலாம்.

சாத்துகுடியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளது. சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதால் இறப்பை சம்மந்தப்பட்ட நோய்களான அஜீரணம், வயிற்றில் எற்படும் அல்ஸர், நெஞ்சு எரிச்சல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.
 
சாத்துக்குடி ஜூஸ் வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலையாக வைத்து செரிமான பிரச்சனையை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது, அதோடு வாய்வு  பிரச்சனையை தடுத்து நிறுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது இந்த சாத்துக்குடி ஜூஸ்.
 
உடல் எடை அதிகமாய் காணப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜுஸை குடித்து வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்து  காணப்படும்.
 
சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும் உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை இந்த சாத்துக்குடி ஜுஸிற்கு உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் கண்டிப்பாக உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.