வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பாகற்காய் ஜூஸில் உள்ள பலவகையான மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்...!!

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அத்துடன் பாகற்காயில் முக்கியமான ஊட்டச் சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது.
 

பாகற்காயில் இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காயில்  தயாரிக்கப்படும் ஜூஸில் பலவகையான மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ளது.
 
ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தை குறைக்கும்.
 
தேவையான பொருட்கள்:
 
பாகற்காய் - 2
எலுமிச்சை - 1/2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
 
செய்முறை:
 
முதலில் பாகற்காயை கழுவி, விதைகளை நீக்கி, காய்களை துண்டுகளாக்கிக் கொள்ளவேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் அந்நீரில் பாகற்காய் துண்டுகளை ஊறவைக்க வேண்டும்.
 
10 நிமிடம் கழித்து, ஊறவைத்த பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் உப்பு,  மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
 
நன்மைகள்:
 
பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும்.
 
பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
 
ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
 
பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்.
 
புற்றுநோய் வராமல் இருக்க, அவ்வப்போது பாகற்காய் ஜூஸ் குடிக்கலாம்.