1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கர்ப்ப காலத்தில் மசாலா பொருட்கள் உள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும் ஏன்...?

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வித்தியாசமான சில உணவுகளை உண்ணத்தோன்றும், இதில் மாங்காய், சாம்பல் போன்ற பொருட்களும் சிலருக்கு பிடிக்கும்.

கர்ப்ப காலத்தில் அதிக காரம் மற்றும் மசாலா இணைந்த உணவுகளை உட்கொண்டால் அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதுண்டு. இருப்பினும் அளவுக்கு அதிகமான எதுவும் நஞ்சுதான் என்பதால் கர்ப்பத்தை தாங்கும் நம் உடல் சில காரம் அல்லது மசாலா உணவுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. அவை என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
 
காரமான உணவுடன் தொடர்புடைய பொதுவான புகார்களில் நெஞ்செரிச்சல் ஒன்றாகும். கர்ப்ப காலத்தின் போது, ​​வயிற்றில் வளர்ந்து வரும் கருவிடமிருந்து அதிகரித்த அழுத்தம் ஏற்படுகிறது, இது அமில சுத்திகரிப்புக்கு வழிவகுக்கும்.
 
உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் உயிர்ச்சத்து குழாய்க்குள் செல்ல நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம் மற்றும் குமட்டல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
 
உங்கள் மார்பிலும் தொண்டையிலும் நீங்கள் அசௌகரியம் அடைந்திருப்பதை உணர்வீர்கள், அதிகப்படியான மசாலா உங்கள் வயிற்றின் மென்மையான  சமநிலையை பாதிக்கலாம், இதனால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
 
பொதுவாகவே ஒரு உயிரை நம் உடல் தாங்க ஆரம்பிக்கும்போது சில முக்கிய அசௌகரியங்கள் இருக்கும். அதில் ஒன்றுதான் காலை நேரம் ஏற்படுகின்ற வாந்தி  மற்றும் மயக்கம்.
 
இது அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் இணைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது அதிகரிக்கின்றது. சில வாசனை ஒவ்வாமைகளும் ஏற்பட்டு அதன்  மூலமும் வாந்தி ஏற்படலாம். ஆகவே கர்ப்ப காலத்தில் புதிய மசாலா உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
 
கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை உட்கொள்ள ஆசையாக இருந்தால் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் உடல் மற்றும்  வயிறு எவ்வளவு காரத்தை தாங்கி கொள்ளும் என்கிற தெளிவைக் கொடுக்கும். மேலும் நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்பட்டால் தவிர்க்கலாம்
 
அதுமட்டுமின்றி உண்ணும் மசாலா மற்றும் காரமான பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டவையா கலப்படமற்றவையா என்பதை பார்த்து சாப்பிடவேண்டியதும்  அவசியமாகிறது.