டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துமா....?
டார்க் சாக்லேட் இதய நோய் தடுக்க உதவும். சிறிய அளவிலான ஆய்வுகள் கோகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.
கோகோவின் வெவ்வேறு தினசரி அளவை உட்கொண்ட போது பரிசோதிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு கோகோ உண்மையில் இதய நோய்கள் வரமால் தடுக்கிறது.
சாக்லேட் அற்புதமான மருத்துவ நன்மை என்னவென்றால், இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் சாக்லேட் உட்கொள்வதால் உங்களது மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் ஆகியவை அதிகரிக்கறது. அதில், டார்க் சொக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரியவந்தது.
டார்க் சொக்லெட்டுகளைச் சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.
தமனிகளின் விரைப்புத் தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும்தன்மையும் தமனி வீக்கத்துக்குக் காரணமாக அமைகின்றன. இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
டார்க் சாக்லெட்டில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது.