செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க...!!

முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து, முகம் பொலிவுடன் இருக்கும்.
பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும். 
 
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நட்களுக்கு செய்து வர  நல்ல பலன் கிடைக்கும்.
 
முழங்கை முட்டி பகுதி கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர  மிடுதுவாக மாறும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், உதட்டில் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
 
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம்  மறையும்.
 
வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம்  பிரகாசமாக இருக்கும்.