எளிதாக கிடைக்கக்கூடிய தயிர் இத்தனை பயன்களை கொண்டதா...?

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும் நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும். நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
 
வயிறு சரியில்லாதபோது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
 
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர்  வழங்குகிறது.
 
வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம்  செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
 
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
 
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில்  போட்டு வைத்தால் நிறம் மாறாது.
 
மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து  நீர் மோராக்கி குடிக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :