பிரபஞ்ச சக்தியை பெற ரெய்கி எவ்வாறு உதவுகிறது...?

ரெய்கி என்பது என்ன சந்தேகம் அனைவருக்கும் உண்டு. ரெய்கி: ரெய் என்றால் தூய்மையான, புனிதமான என்றும் கீ என்றால் Cosmic  enrgy (Universal Power) என்றும் சொல்லலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். அண்டத்தில் அளவிலா சக்திகள் இயங்குகின்றன. அதே சக்திகள் உடம்பிலும் இயங்குகின்றன. 
உலகம் இயங்கக் காரணமாக இருப்பதே இந்த சக்திதான். உலகில் உள்ள எல்லா உயிரினங்கள், தாவரங்கள் மட்டுமன்றி, நதிகள் ஓடுவது,  நெருப்பு எரிவது, காற்று வீசுவது போன்ற எல்லா இயக்கங்களுக்கும் காரணம் சூட்சும சக்திதான். பஞ்ச பூதங்களும் அதன் விதிப்படி  பிரபஞ்சத்தில் இயங்குவது போல, நமது உடம்பிலும் பஞ்சபூத சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனை நாம் உணருவதில்லை. 
 
ரெய்கியின் மூலமாக அந்த சக்தியினை நாம் உணரமுடியும். எப்படியெனில் பிரபஞ்ச சக்தியை சஹஸ்ரஹார சக்கரத்தின் மூலமாக, மற்ற  எல்லா சக்கரங்களுக்கும் சக்தியைச் செலுத்தி, அதன்பின் தியானங்கள், பயிற்சி வழிமுறைகள் மூலமாக அந்த சக்தியை கைக்கு (உள்ளங்கை) கொண்டுவந்து தனக்குத் தானே சக்தியை கூட்டிக் கொள்ளவும் அடுத்தவர்களுக்கும் சக்தியூட்டவும் பயன்படுத்தலாம். இதை சூட்சும சக்தி என்றும்  சொல்லலாம். இதைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் கண்டிப்பாக உணர முடியும். இதை ரெய்கி  சூட்சுமம் என்றும் சொல்லலாம்.
ஒரு குரு மூலமாக தீட்சை எடுக்கும்போது சக்கரங்கள் திறக்கப்பட்டு சூட்சும சக்தி மூலாதாரத்தை அடைந்து பயிற்சியின் மூலமாக கைகளுக்குக் கொண்டுவரும்போது அவர்கள் ரெய்கி சேனல் ஆகிவிடுகிறார்கள்.
 
தியானம் செய்வதன் மூலமாகக்கூட சில விஷயத்தை நடத்திக்காட்ட முடியும். ரெய்கி உடம்புக்கும் மனதுக்கும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற எவ்வளவோ பிரச்சனைகளுக்கும் விஷயங்களுக்கும் பயன்படுகிறது. மருந்து மாத்திரையின்றி கைகள் மூலமாகவே  அதிசயங்களைக் காண்பதே இதன் சிறப்பாகும்.


இதில் மேலும் படிக்கவும் :