1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கத்தரிக்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுமா...?

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை  கட்டுப்படுத்துவதால் , உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கத்தரிக்காய் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது.
 
கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1,  மற்றும் பி2, காணப்படுகின்றன. 
 
வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம்  குறையும்.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
 
கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது.  கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.
 
கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் எல்லாம் இருக்கிறது என்பது தெரிந்தால், எங்கே கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள். என அவ்வளவு சத்துக்கள் மற்றும் பயன்களை தருகிறது. கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க  விரும்புபவர்களுக்கு ஏற்றது. 
 
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக்  குணப்படுத்தும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.