வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அதிக சத்துகளை கொண்ட பச்சை பட்டாணி எப்படி பயன்படுகிறது...?

பச்சை பட்டாணியில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. பச்சை பட்டாணியில் நோய் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
பச்சை பட்டாணியானது தோட்டப் பட்டாணி, இனிப்பு பட்டாணி, இங்கிலீஸ் பட்டாணி எனவும் வழங்கப்படுகிறது. பச்சை பட்டாணி லேசான இனிப்பு கலந்த தனிப்பட்ட சுவையினை உடையது.
 
பச்சை பட்டாணியில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை  காணப்படுகின்றன.
 
இவை உடலினை ப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பால் ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியை தடை செய்கின்றன. மேலும் பட்டாணியில் காணப்படும்  பாலிபீனாலான கௌமெஸ்டிரால் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது உடலில் நோய்கிருமிகள் நுழைவதை தடைசெய்வதோடு பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப்  பாதுகாக்கிறது.
 
பச்சை பட்டாணியில், விட்டமின் சி-யானது அதிகளவு காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நோய் எதிர்ப்பு  பண்பினை அதிகரிக்கிறது. எனவே பச்சை பட்டாணியை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.
 
பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் இரத்த சிவப்பு அணுக்களின் குறைவால் ஏற்படும் அனீமியா, சோர்வு ஆகியவற்றை போக்க பச்சை பட்டாணி சிறந்த தீர்வாகும்.
 
பச்சை பட்டாணி அதிக அளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் குறைபாடுகள்  ஏற்படுவதைத் தடைசெய்கிறது.
 
மேற்புறத்தில் சிதைந்த உறைகள் பிரிந்த, முதிர்ந்து மஞ்சள் நிறத்தில் உள்ளவற்றை தவிர்த்து விடவும். பச்சை பட்டாணியை குளிர்பதன‌ப்  பெட்டியில் 2-3 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.