தொடர்புடைய செய்திகள்
- விஜய் பட வில்லனுக்கு ரூ.1.84 கோடி மதிப்புள்ள கார் பரிசளித்த பிரபல நடிகர்!
- மாட்டுச் சாணத்தில் கோடிங் அடித்து... மகளுக்கு கார் பரிசளித்த தந்தை !
- நெல்லை கண்ணணை கைது செய்ததில்...அரசுக்கு உள்நோக்கம் இல்லை : முதல்வர் !
- மூன்றே மாதத்தில் ரிலீசுக்கு தயரான ரியோ படம்!
- ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ்... IND vs SL மேச்சுக்கு கைக்கொடுக்காத லைஃப் ஹேக்ஸ்!!
கடுமையான சளியை மூன்றே நாட்களில் குணமாக்கும் சுக்கு...!!
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
சுக்குடன், தனியா (மல்லி) வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
